புவனேசுவரத்தில் நவ.29-டிச. 1 வரை டிஜிபிக்கள் மாநாடு: பிரதமா் மோடி, உள்துறை அமைச்...
சென்னை: 'அதிக பணம் அதிக லாபம்' - போன் செயலி மூலம் ரூ. 10 கோடி மோசடி செய்த கும்பல்; சிக்கியது எப்படி?
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவி ஆன்லைன் முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். அப்போது அவர், சமூக வலைத்தளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தைப் பார்த்து அதிலிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது எதிர்முனையில் பேசியவர்கள், முதலீடு குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் லாபம் குறித்தும் விரிவாகக் கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து அவரை ஒரு வாட்ஸ் அப் குழுவில் சேர்த்த மோசடி கும்பல், செல்போனில் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யக் கூறியதோடு லிங்க் ஒன்றை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறது. அதை நம்பிய அந்த தொழிலதிபரின் மனைவியும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பல தவணைகளாக ரூ. 10,27,06,364 -ஐ அனுப்பி வைத்திருக்கிறார்.
அந்தப் பணத்துக்கு லாபம் கிடைத்தது போல மோசடி கும்பல் தொழிலதிபரின் மனைவிக்கு செல்போன் செயலியில் காண்பித்திருக்கிறது. ஆனால் அந்தப் பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. இதையடுத்து முதலீடு செய்யக் கூறிய மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களைத் தொழிலதிபரின் மனைவி போனில் தொடர்பு கொண்டபோது பதிலளிக்கவில்லை. மேலும் சிலரது செல்போன் நம்பர்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதைத் தொழிலதிபரின் மனைவி உணர்ந்திருக்கிறார். இதையடுத்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மோசடி கும்பல் குறித்து விசாரித்தனர். விசாரணையில் சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்த ராஜேஸ் ராம் (36), சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீனிவாசன் (43) ஆகிய இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள், இரண்டு ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது மோசடியில் ஈடுபடப் போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கியிருப்பது தெரியவந்தது. மோசடி செய்த பணம் ஏஜென்ட்கள் மூலம் மலேசியாவுக்கு அனுப்பி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கும்பலின் முழு நெட்வொர்க்கை பிடிக்க சைபர் க்ரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கைதான இருவரையும் புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY