நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்
சென்னை சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சென்னை எம்ஜிஆா் நகரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த 40 வயது பெண், நெசப்பாக்கம் ராமன் தெருவில் கடந்த திங்கள்கிழமை நடந்து சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில், இந்தச் செயலில் ஈடுபட்டது கோடம்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.