சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
சென்னை: பட்டாசு வெடித்தில் தகராறு; சிறுவன் அடித்துக் கொலை..!
சென்னை ராயப்பேட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவரின் மகன் ஷாம் (17). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தன்னுடைய நண்பரைச் சந்திக்க ஐஸ்ஹவுஸ் செல்லம்மாள் தோட்டத்துக்குச் சென்றார். பின்னர் அங்கு நண்பர்களுடன் சேர்ந்து ஷாம், பட்டாசுக்களை வெடித்து மகிழ்ந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், இங்கெல்லாம் பட்டாசு வெடிக்கக் கூடாது என கூறியிருக்கிறார். ஆனால் அதையும் மீறி பட்டாசுக்களை வெடித்திருக்கிறார்கள். இதையடுத்து ஷாமை அந்த நபர் அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதில் காயமடைந்த ஷாமை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஷாம் உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.
அதனால் அதிர்ச்சியடைந்த ஷாமின் பெற்றோர், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் உயிரிழந்த சிறுவன் ஷாமின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுவன் ஷாமை அடித்துக் கொலை செய்தது ரௌடி முதலை கார்த்திக் எனத் தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.