கர்மா வட்டியுடன் உங்களை வந்தடையும்..! நயன்தாரா பகிர்ந்த பழமொழி!
சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் ஃபென்ஜால் புயல்!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்த புயல் சின்னம், இன்று(நவ. 29) பிற்பகல் 2.30 மணிக்கு ஃபென்ஜால் புயலாக உருவானது.
ஃபென்ஜால் புயல் தற்போதைய நிலவரப்படி, நாகபட்டினத்திலிருந்து கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னை முதல் புதுச்சேரி வரை.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை
ஃபென்ஜால் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலுக்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை(நவ. 30) பிற்பகல் புயலாக கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.