2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார்: அமைச்சர் கே.என்.நேரு
சென்னையில் பரவலாக மழை!
சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கே.கே. நகர், வடபழனி விருகம்பாக்கம், ராயபுரம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதேபோல மயிலாப்பூர், மந்தைவெளி, கோபாலபுரம், சேப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்த நிலையில் இன்று மாலையும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.