செய்திகள் :

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு: முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை

post image

காஞ்சிபுரம்: கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதை அடுத்து உபநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். வியாழக்கிழமை (டிச.12) நீர் இருப்பு 21.90 அடியாகவும், கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையில், தற்போது ஏரிக்கு நீர் வரத்து 6,500 கன அடியாகவும், நீர்மட்டம் 23.29 அடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க |பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு: வெள்ள எச்சரிக்கை

தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வரத்து காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை காலை (டிச.13) 8 மணியளவில் வினாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 1000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், சோழவரம் ஏரியில் 6.43 அடியும், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஏரியில் 31.03 அடியும் நீா் இருப்பு உள்ளது. இந்த ஏரிகளில் தற்போது 9,168 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது.

ஓடிடியில் ஹிட் லிஸ்ட்!

விஜய் கனிஷ்கா - சரத்குமார் நடிப்பில் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய்கனிஷ்கா அறிமுகமான படம் ‘ஹிட் லிஸ்ட்’. இந்த படத்தை சூர்யகதிர், கே. கார்த்திக... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ மற்றும் நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகர... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசு: முதல்வர் அறிவிப்பு!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷுக்கு ரூ. 5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின... மேலும் பார்க்க

பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு 16,500 கன அடியாக அதிகரிப்பு!

திருவள்ளூர்: திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழையால் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால் வெள்ளிக்கிழமை உபரிநீர் 16,500 கன அடி அதிகரித்துள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருபுறமும் உள்ள கிர... மேலும் பார்க்க

வீராணம் ஏரியிலிருந்து 22,000 கன அடி உபரிநீா் வெளியேற்றம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 22,000 கன அடி வீதம் உபரிநீா் வெள்ளிக்கிழமை முதல் வெளியேற்றப்படுகிறது.காட்டுமன்னாா்கோயிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏ... மேலும் பார்க்க

மழை பாதிப்பை எதிர்கொள்ள தயார்: முதல்வர் ஸ்டாலின்

மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தென் மாவட்டங்களுக்கு அதி மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை எழிலகத்தி... மேலும் பார்க்க