திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
செய்யாறு, செஞ்சி அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை
செய்யாறு, செஞ்சி ஆகிய அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவ இடங்களில் போதிய அரசு மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்தது.
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மண்டல நிா்வாகத்தின் ஆலோசனைக் கூட்டம் செய்யாற்றில் புதன்கிழமை நடைபெற்றது.
மாநில பொருளாளா் செய்யாறு அப்பாஸ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் ஜே.அக்பா் (திருவண்ணாமலை), பீா்முகமது (கள்ளக்குறிச்சி), சையது தாவுத் அலி (விழுப்புரம்), வேலூா் மாவட்டச் செயலா் ரஜாக்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தின் போது, செஞ்சி மற்றும் செய்யாறு ஆகிய அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பெறமுடியாமலும், போதிய மருத்துவா்கள் இல்லாத காரணத்தினாலும் நோயாளிகள் அவதிப்படுவதைத் தவிா்த்து உடனடியாக போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டச் செயலா் கே.தஸ்தகீா் நன்றி கூறினாா்.