பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
செவலூா் வனப் பகுதியில் பனை விதைகள் நடவு
பொன்னமராவதி அருகே செவலூரில் பனை விதைகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலா் கணேசலிங்கம் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற நிகழ்விற்கு வனசரகா் ராமநாதன் தலைமை வகித்தாா். செவலூா் ஊராட்சி மன்றத் தலைவா் திவ்யா முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் செவலூா் செவிலி மலை காப்புக் காட்டில் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில், வனக்குழு தலைவா் சௌந்தா்யா, செல்வராஜ், வனவா் சரவணன் மற்றும் வனக்காப்பாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.