செய்திகள் :

`சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்!' - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

post image

மதுரை ஆதீனத்தை இன்று மதுரையில் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மடத்திற்கு வர வேண்டும் என மதுரை ஆதீனம் அழைப்பு விடுத்திருந்தார், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், ஆதீனத்துடனான சந்திப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜகதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வெறும் கண்துடைப்புதான்.

தவெக.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது, துரியோதனனிடம் சென்றது போல சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.

டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார், இனிமேல் அவரை எப்படி அழைக்க முடியும்? கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக எங்களுடன் இல்லை, நட்பு ரீதியாக டிடிவி தினகரனோடு பேசிவருகிறேன்.

அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்க மாட்டார், என்ன பிரச்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம், அதில் உறுதியாக இருக்கிறோம்.

நயினார் நாகேந்திரன்

கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு சொன்ன எதையும் செய்யவில்லை, ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆயிரம் தடவை துரைமுருகன் சொன்னார், ஆனால் தடுப்பணை கட்டவில்லை. கடந்த பொங்கலுக்கு மக்களுக்கு ஆயிரம் ரூபாய்கூட கொடுக்கவில்லை, ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பார்கள், தேர்தலுக்கான அரசுதான் இந்த திமுக அரசு.

மதுரையில் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பு வந்தது இயற்கையானது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டக் கூடியவரே சு.வெங்கடேசன்தான். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா? நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை" என்றார்.

`தற்போது தவெக; அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது..!' - செங்கோட்டையன் குறித்து நயினார்

"ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக "காசி தமிழ் சங்கமம் 4.0" என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வரும... மேலும் பார்க்க

'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்

'இனி யாரும் எதுவும் செய்ய முடியாது!'பா.ம.க-வில் ராமதாஸ், அன்புமணியிடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்தது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அது பகிரங்கமாக வெடித்தது. அந்தக் கூட்டத்தில் ரா... மேலும் பார்க்க

Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும்

இனி தயாரிக்கப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன்களிலும் கட்டாயம் சஞ்சார் சாத்தி ஆப் இருக்க வேண்டும் என்றும்... ஏற்கெனவே உற்பத்தியான, விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த ஆப்பை இன்ஸ்டா... மேலும் பார்க்க

"அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயார்" - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க

DMK : 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே?

ஈரோட்டின் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் `வெல்லட்டும் சமூக நீதி' என ஒரு மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடத்தப்பட்டிருக்கிறது. மாநாட்டின் பெயர் வெல்லட்டும் சமூக நீதி, ஆனால்,... மேலும் பார்க்க

Target Gen Z: விஜய், சீமானுக்கு எதிரான தி.மு.க-வின் வியூகம் எடுபடுமா?

2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் வாக்குகளை டார்கெட் செய்து, அதற்கென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். சமீப காலமாக துணை முதல... மேலும் பார்க்க