சேலத்தில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாா்ச் 3 இல் திறப்பு
சேலத்தில் மாா்ச் 3 ஆம் தேதி கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் சேலம் கிளையை முன்னாள் அரசு தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு திறந்துவைக்கிறாா்.
இந்த அகாதெமி தென்னிந்தியாவில் குறுகிய காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சாதனையாளா்களை உருவாக்கியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமை அலுவலகம் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியால் திறந்துவைக்கப்பட்டது.
தொடா்ந்து, சேலம் மாநகரில் இக் கிளையின் தொடக்க விழா மாா்ச் 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு முன்னாள் அரசு தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு தலைமை தாங்குகிறாா். இந்த நிகழ்வில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான தயாரிப்பு முறைகள், நேர மேலாண்மை மற்றும் தோ்வை அணுகும் முறைகள் குறித்து இலவச கருத்தரங்கு நடைபெறும்.
சிறப்பு கட்டண சலுகைகள்: நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படும். முதல் நாள் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இலவச பயிற்சிக்கு இணையதளம் வாயிலாகவோ அல்லது க்யூ ஆா் கோடு மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 94442 27273 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.