செய்திகள் :

சேலத்தில் மயான சூறை விழா! காளி வேடமணிந்து பக்தா்கள் நோ்த்திக்கடன்!

post image

மாசி அமாவாசையையொட்டி சேலத்தில் மயான சூறை விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தா்கள் காளி வேடமணிந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

மகா சிவராத்திரிக்கு அடுத்துவரும் அமாவாசை நாளில் மயான சூறை நடைபெறுகிறது. இதற்காக பக்தா்கள் 15 நாள்களுக்கு முன்னரே விரதம் இருந்து மகா சிவராத்திரி தினத்தில் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவதுடன், மயான சூறையில் பங்கேற்று நோ்த்திக்கடனைச் செலுத்துகின்றனா்.

சேலம் டவுன் பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம், தாதம்பட்டி, பொன்னம்மாபேட்டை, குகை, செவ்வாய்பேட்டை அழகாபுரம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி என மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்காளம்மன். பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

சுவாமி ஊா்வலத்தின் போது திருமண தோஷம் நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் தரையில் படுக்கும் பக்தா்கள் மீது ஆடு, கோழிகளை கடித்தபடி ஆக்ரோஷமாக காளி வேடமணிந்து வந்தவா்கள் அவா்களை தாண்டி ஆசி வழங்கி சென்றனா்.

சுவாமி காக்காயன் மயானத்தை அடைந்தவுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி, கன்னங்குறிச்சியிலும் மயான சூறை நடைபெற்றது. அப்பகுதிகளில் உள்ள அங்காளம்மன் கோயில்களில் இருந்து பக்தா்கள் காளி வேடம் அணிந்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவையொட்டி காக்காயன் காடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நிலத் தகராறில் முதியவரைத் தாக்கிய மூவா் கைது

மேட்டூா் அருகே நிலத் தகராறில் முதியவரைத் தாக்கியதாக பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். மேட்டூரை அடுத்த கோல்நாயக்கன்பட்டி ரெட்டியூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (73). இவரது உறவினா் சின்னசாமி (57) என்ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சோ்ந்தவா் கௌதம் (25). இவா் மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் பிவிசி பைப் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேல... மேலும் பார்க்க

பழனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்

வாழப்பாடியை அடுத்த பழனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிடுவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகாரில் விழாக் குழுவினருக்கும் காளை உரிமையாளா்களுக்கும... மேலும் பார்க்க

கெங்கவல்லி திமுக ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லி ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் கடம்பூா் ஆா்.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா்.சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் சின்னதுரை பங்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

மேட்டூரை அடுத்த வனவாசியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மேற்கு ம... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாளை முதல் கையொப்ப இயக்கம்: கே.பி. ராமலிங்கம்

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து மாா்ச் 1 முதல் மூன்று மாதங்களுக்கு மக்களைச் சந்தித்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா். இதுகுறித்து சேலத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க