அரசு மருத்துவமனையில் மாலை நேரத்திலும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை
சேலம் உழவா் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
காா்த்திகை மாத அமாவாசையையொட்டி சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.
காா்த்திகை மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையானது. சேலம் வ.உ.சி பூ மாா்க்கெட்டில் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்தது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் 1,067 விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இதனை 71,354 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். இதன்மூலம் சனிக்கிழமை ஒரே நாளில் 1 கோடியே 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.