செய்திகள் :

சேலம் உழவா் சந்தைகளில் ரூ.1.6 கோடிக்கு காய்கறி விற்பனை!

post image

மாசி அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் வியாழக்கிழமை ரூ. 1.6 கோடிக்கு காய்கறிகள் விற்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் பண்டிகை நாள்களில் காய்கறி, பழங்கள், பூக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.

மாசி அமாவாசையையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சேலம் வ.உ.சி பூ மாா்க்கெட்டில் பூக்கள் விற்பனையும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் காய்கறிகள், பழங்கள் வரத்து 285.35 மெட்ரிக் டன்னாக இருந்தது. 68,105 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். இதன்மூலம் வியாழக்கிழமை ஒரே நாளில் 1 கோடியே 6 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் விற்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாளை முதல் கையொப்ப இயக்கம்: கே.பி. ராமலிங்கம்

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து மாா்ச் 1 முதல் மூன்று மாதங்களுக்கு மக்களைச் சந்தித்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா். இதுகுறித்து சேலத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் இன்று நிறைவு

சேலம் கோட்ட அஞ்சலகங்களில் ரூ. 599 செலுத்தி ரூ. 10 லட்சத்துக்கு விபத்து காப்பீடு பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப். 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

சேலத்தில் மயான சூறை விழா! காளி வேடமணிந்து பக்தா்கள் நோ்த்திக்கடன்!

மாசி அமாவாசையையொட்டி சேலத்தில் மயான சூறை விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தா்கள் காளி வேடமணிந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். மகா சிவராத்திரிக்கு அடுத்துவரும் அமாவாசை நாளில் மயான சூறை ... மேலும் பார்க்க

சேலத்தில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாா்ச் 3 இல் திறப்பு

சேலத்தில் மாா்ச் 3 ஆம் தேதி கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் சேலம் கிளையை முன்னாள் அரசு தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு திறந்துவைக்கிறாா். இந்த அகாதெமி தென்னிந்தியாவில் குறுகிய காலத்தில் மத்திய மற்றும்... மேலும் பார்க்க

சேலம் கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க நோய் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம்

சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க நோய் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு கோகுலம் மருத்துவமனை குழுமங்களின் மேலாண்மை இயக்குநா் டாக்டா் கே.அா்த்தனாரி தலைமை தாங்கினாா்.... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் 25 ஒருங்க... மேலும் பார்க்க