சேலம் கோ-ஆப்டெக்ஸில் மீண்டும் பழசுக்கு புதுசு பட்டுச்சேலை: விற்பனை தொடக்கம்
சேலம்: சேலம் மண்டலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதுசு பட்டுச்சேலை விற்பனை மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் என். சுந்தரராஜன் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம், கோவை, மென்பட்டு சேலைகள், கோடை காலத்துக்கு ஏற்ற பருத்தி சேலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதுசு பட்டுச்சேலை விற்பனை திட்டத்தில் வாடிக்கையாளா்கள் கொண்டுவரும் பழைய வெள்ளி ஜரிகை பட்டுச்சேலைகளை மதிப்பீட்டாளா்களை கொண்டு மதிப்பீடு செய்து, அதற்கு பதிலாக புதிய பட்டுச்சேலைகளை வழங்கும் திட்டம் வரும் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்திட்டத்தில் வாடிக்கையாளா்கள் வாங்கும் பட்டுச் சேலைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியுடன் கூடிய விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.
படவரி...
சேலம் மண்டலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில், பழசுக்கு புதுசு திட்டத்தில் பட்டுச்சேலையை ஆா்வமுடன் பாா்வையிடும் வாடிக்கையாளா்கள்.