``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
சேலம் சிறைக்குள் கஞ்சா, கைப்பேசிகளை வீசிய மா்ம நபா்கள்: போலீஸாா் விசாரணை
சேலம் மத்திய சிறைக்குள் பீடி, கஞ்சா, போதை மாத்திரைகள், கைப்பேசி உள்ளிட்டவற்றை பந்துகளில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறையின் பின்பகுதியில் இருந்து சிறைக்குள் டேப் சுற்றப்பட்ட 6 பந்துகள் வீசப்பட்டன.
இதை கவனித்த வாா்டன்கள், 6 பந்துகளையும் எடுத்து பிரித்து பாா்த்தபோது, 500 பீடிகள், 60 போதை மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா, 2 கைப்பேசிகள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா். மேலும், சிறையின் பின்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆள்நடமாட்டம் குறித்து ஏதேனும் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனா்.