செய்திகள் :

சேலம்: ``தறி ஓட்டுனா பொண்ணு தரவே யோசிக்கிறாங்க'' - நிலைமையை சொல்லும் கைத்தறி நெசவாளர்கள்

post image

சோறு எப்படி வருது என்று கேட்டால், இப்போதைய பிள்ளைகள் "வயலில் இருந்து வருது" என்று சொல்வது போல, நாம் உடுத்துகிற ஆடை எப்படி உருவாகிறது என்று கேட்டால், பலருக்கும் தெரியாது. நூல்களையெல்லாம் ஒருங்கிணைத்து துணியாக மாற்றுவதற்கு பல்வேறு படிகள் இருக்கின்றன. அந்த படிகளில் முக்கியமான ஒன்று தான் "கைத்தறி நெசவு".

நம் முன்னோர்கள் தற்சார்பாக வாழ்ந்த மக்கள். அதனால் தான் மனித வாழ்வுக்கு தேவையான அடிப்படை விஷயங்களான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை இயற்கையோடு ஒன்றிணைந்து செய்ய ஆரம்பித்தார்கள்.

அந்த வகையில், பழங்காலத்திலிருந்தே துணிகள் உருவாக்குவதில் "கைத்தறி நெசவு" பெரும் பங்கு வகித்திருக்கிறது. என்னத்தான் இன்றைய நவீன காலத்தில் மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய "பவர் லூம்", "ஆட்டோ லூம்" போன்றவை பெருவாரியான பணிகளை செய்தாலும், இன்றும் இந்தியாவின் பல கிராமங்களில் கைத்தறியின் ஒலி விடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

கைத்தறி நெசவாளர்கள்

மூலப்பொருட்களின் விலை உயர்வு, நவீனமயமாகுதல், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காதது- இவை அனைத்தும் காரணம். அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய தொழில் என்றே சொல்லலாம். ஏனென்றால், இந்த தொழிலை குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சி எடுத்துவிட்டாலே செய்ய முடியாது.

சிறு வயதிலிருந்தே அதை குடும்பத்தில் பார்த்து வளர்ந்தவர்களால்தான் முழுமையாக செய்ய முடியும்.

ஆனால், அவர்கள் கஷ்டத்தையும் சேர்த்து பார்த்ததால் வேறு தொழில்களை நோக்கி போக ஆரம்பித்துவிட்டார்கள். எங்க பகுதியில் 30 வருடங்களுக்கு முன்னாடி சுமார் 100 கைத்தறி நெசவாளர்கள் இருந்தாங்க... ஆனால் இப்போது 10 நபர்களைப் போலத்தான் இருக்காங்க.

மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்காங்க. ஆனால், அது எல்லா நெசவாளர்களுக்கும் போய் சேர்வதில்லை. Weavers Service Centre என்று சொல்லப்படும் மத்திய அரசு ஏற்படுத்திய சேவை மையம் அல்லது சமூக நுகர்வோர் சங்கம் (சொசைட்டி) மூலம் நெசவு செய்பவர்களுக்கு நலத்திட்டங்கள், சலுகைகள் உண்டு. ஆனால், தனியாரில் நெசவு செய்பவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை.

கைத்தறி நெசவாளர்கள்
கைத்தறி நெசவாளர்கள்

யாருக்கு அதிக லாபம்?

விற்பனையாளர்களுக்குத்தான். ஒரு பட்டு புடவை ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டால், அதில் 10% க்கும் குறைவான கூலிதான் நெசவாளர்களுக்கு! ஆகையால் நடுவில் இருக்கக்கூடிய mediators குறைந்து, அரசே முழுமையாக வணிகத்திற்கு ஏற்பாடு செய்தால் நல்லாக இருக்கும்.

தமிழர்களின் முக்கிய கலையான இந்த கைத்தறி நெசவு, இளைஞர்கள் கையில் செல்லாத வரைக்கும் அடுத்த நிலைக்கு போக வாய்ப்புகள் இல்லை. நம்ம சேலத்திலேயே இந்திய கைத்தறி தொழில்நுட்ப கழகம் என்று சொல்லப்படும் மத்திய அரசு கல்லூரி இருக்கிறது. இப்படிப் பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவர்களும் இளைஞர்களும் கைத்தறியை பாதுகாப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

அடுத்ததாக, அரசு சாரா தேசிய கைத்தறி நெசவாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த, தற்போது சேலத்தில் வசித்து வரும் கைத்தறி நெசவாளர் மெய்யழகனிடம் பேசினோம்.

“மன்மோகன் சிங் காலகட்டத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீடு இருந்தது.

இப்போது அதை பற்றி யாருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. அதுமட்டுமில்லாமல், அரசிடம் நெசவு செய்பவர்களை விட தனியாரிடம் நெசவு செய்பவர்களுக்கு அதிக கூலி கிடைக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் தனியார் பக்கம் போய்டுறாங்க.

ஆனால், அரசு நிறுவனம் கோ-ஆப் டெக்ஸ் மற்றும் கிராமப்பகுதியில் இருக்கும் சொசைட்டிகளில் நெசவு செய்பவர்களுக்குத்தான் நலத்திட்டங்கள் கிடைக்கும்.

மெய்யழகன் | கைத்தறி நெசவாளர்கள்
மெய்யழகன்

மேலும், மக்களும் முன்பு போல கைத்தறி நெசவு செய்யப்பட்ட ஆடைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. புதிய புதிய வண்ண வேலைப்பாடுகளுடன், குறைந்த விலையில் இறக்குமதி ஆகும் ஆடைகளைத்தான் விரும்ப ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால், செயற்கையான இழைகளில் தயாரிக்கப்படும் ஆடைகளால் ஏற்படும் ஆபத்துகளை மக்கள் யோசித்து பார்ப்பதில்லை.

மக்களுக்கு இது பற்றி இன்னும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, நம்முடைய அரசாங்கம் நெசவாளர்களுக்கும் நுகர்வோருக்கும் ஒரு பாலம் மாதிரி இருந்தால்தான் இந்த நிலை மாறும் என்று நினைக்கிறேன்.” என்றார்.

மேலும், சேலம் தில்லைநகரில் உள்ள மத்திய அரசின் நெசவாளர் சேவை மையத்தில் லேப் அசிஸ்டென்டாக பணியாற்றி வரும் சிதம்பரத்திடம் பேசினோம்.

இந்தியாவில் சுமார் 3.5 மில்லியன் கைத்தறி நெசவாளர்கள் இருக்காங்க. இவர்களுக்காக நம் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள மையம் தான் இந்த “நெசவாளர் சேவை மையம்”. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மையம் இருக்கிறது.

சிதம்பரம்

நம் தமிழ்நாட்டில் மட்டும் கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 3 இடங்களில் — சென்னை, சேலம், காஞ்சிபுரம் - இம்மையங்கள் உள்ளன. குறிப்பாக சென்னை, 5 மாநிலங்களுக்கு தலைமை அலுவலகமாக செயல்படுகிறது.

இந்த அமைப்பின் முக்கிய சேவை, “நெசவாளர்களுக்கு உள்ள சந்தேகங்களைத் தீர்த்து, புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நலத்திட்டங்களை பெற உதவுவது” தான்.

கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்டங்கள்

1) நெசவாளர் நலக் கல்வி உதவித்தொகை திட்டம்:
கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகள் — அதிகபட்சம் 2 பேருக்கு - பள்ளி கல்வியை முடித்த பின் ஜவுளித் துறை சார்ந்த டிப்ளமோ, இளநிலை, முதுநிலை படிப்புகளை படிக்கும் போது ரூ.50,000 முதல் ரூ.1,50,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

 நெசவாளர் நலக் கல்வி உதவித்தொகை திட்டம்
நெசவாளர் நலக் கல்வி உதவித்தொகை திட்டம்

2) கைத்தறி நெசவினை இலகுவாக்கும் வகையில் 90% மானியத்தில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட ஜக்கார்டு மெஷின், நூல் சுற்றும் மெஷின் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. தறியையும் இம்மானியத்தில் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

3) தறிக் கூடம் அமைப்பதற்கான தொகையும் மானியமாக வழங்கப்படுகிறது. பெண்கள், ஆண்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எனத் தனித்தனியாக தொகைகள் வழங்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட நலத்திட்டங்களில் பயன்பெற வேண்டுமெனில், மத்திய அரசின் “நெசவாளர் அடையாள அட்டை” அவசியம். மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நெசவாளர்களின் கணக்கெடுப்பு எடுத்து வருகிறது. அந்த கணக்கெடுப்பின் மூலம் அல்லது அருகிலுள்ள நெசவாளர் சேவை மையத்தை அணுகியும் இந்த அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

தனியார் அல்லது அரசு -எங்கு நெசவு செய்தாலும்- மேற்குறிப்பிட்ட நலத்திட்டங்கள் கிடைக்கும். ஆனால், மாநில அரசின் சொசைட்டி மூலம் நெசவு செய்பவர்கள், சொசைட்டியின் நலத்திட்டங்களையே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 கைத்தறி
கைத்தறி

இத்தனை நலத்திட்டங்கள் இருந்தும் கைத்தறி நெசவாளர்களின் நிலை சற்று கவலைக்கிடமாக இருக்கிறதே!

“ஆமாம், இன்று இருக்கிற பெரிய சவாலே எல்லாரும் தனித்தனியே செயல்படுவதுதான். ஒரு கிராமத்தில் ஒருவருக்கு நெசவாளர் அடையாள அட்டை பற்றி தெரிய வந்தாலும், அவர்கள் அதை மற்றவர்களுக்குச் சொல்ல முயற்சி செய்வதில்லை.

நாங்களும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, இந்த நலத்திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்திக்கிட்டே இருக்கிறோம். ஆண்டுதோறும் விழிப்புணர்வு முகாமும் நடத்தி வருகிறோம்.

"அரசு, தனியார் நிறுவனங்கள், மக்கள் மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் கைத்தறி மட்டுமல்ல, அனைத்து துறைகளும் வலுப்பெறும்.” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்

இன்று மதுரையில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின்.இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக, 'TN ரைஸிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில்' கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ரூ.36,660.35 கோடி முத... மேலும் பார்க்க

``முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் ரூ.500 கோடி இல்லை'' - கிரிக்கெட் வீரர் சித்து மனைவி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீப காலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலிலும் கூட பிரசாரம் செய... மேலும் பார்க்க

அலுவலக நேரத்திற்கு பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா

கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தனிப்பட்ட மசோதா ஒன்றை‌ முன்மொழிந்துள்ளார்.என்ன மசோதா?சுப்ரியா சுலே முன்மொழிந்துள்ள மசோதாவின் முக்கிய அம்சம் இது தான் - வேலை நேரத்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலி மருந்து வழக்கு' சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி-க்கு புகார் அளித்தது. அதன்படியில் புதுச்சேரி மேட்டு... மேலும் பார்க்க