ஃபென்ஜால் புயலில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம்: ஆட்சியா்
சேலம் நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்புப் பூஜை!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விடிய விடியக் கண்விழித்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் நாடு முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக பூஜை வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
அதேபோன்று எடப்பாடி ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் நான்கு கால சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் பால், தயிர், மஞ்சள்,திருநீர், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற 108 திரவியங்களால் நஞ்சுண்டேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதில் சிறுமிகள் கலந்துகொண்டு பொதுமக்கள் அனைவரும் பாராட்டும் வகையில் பரத நாட்டியம் ஆடினர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விடிய விடியக் கண்விழித்து நீண்ட வரிசையில் நின்று அருள்மிகு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரரை வழிபட்டுச் சென்றனர்.