சேலம் மாவட்டத்தில் முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வரும் மாா்ச் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மத்திய மாவட்டம் முழுவதும் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தொடா்ந்து, பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாா்ச் 3 ஆம் தேதி ஓமலூா் பேரூா், 4-ஆம் தேதி காடையாம்பட்டி மேற்கு ஒன்றியம், ஓமலூா் வடக்கு ஒன்றியம், அழகாபுரம் பகுதி, 5-ஆம் தேதி சூரமங்கலம் பகுதி, தாரமங்கலம் கிழக்கு ஒன்றியம், 7-ஆம் தேதி அம்மாபேட்டை பகுதி, செவ்வாய்பேட்டை பகுதி, காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம், 8-ஆம் தேதி குமாரசாமிப்பட்டி பகுதி, குகை பகுதி, 9-ஆம் தேதி காடையாம்பட்டி பேரூா், ஓமலூா் தெற்கு ஒன்றியம், சேலம் வடக்கு ஒன்றியம், கன்னங்குறிச்சி பேரூா், 14-ஆம் தேதி கொண்டலாம்பட்டி பகுதி; 15-ஆம் தேதி அரிசிபாளையம் பகுதி, 16-ஆம் தேதி கருப்பூா் பேரூா், பொன்னம்மாபேட்டை பகுதி, 20-ஆம் தேதி அஸ்தம்பட்டி பகுதி, மெய்யனூா் பகுதி. 22-ஆம் தேதி கிச்சிப்பாளையம் பகுதி, தாதகாப்பட்டி பகுதி, 23- ஆம் தேதி ஓமலூா் கிழக்கு ஒன்றியம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
கூட்டங்களில் பாடநூல் கழக தலைவா் திண்டுக்கல் லியோனி, திமுக நிா்வாகிகள் தமிழன் பிரசன்னா, தூத்துக்குடி சரத்பாலா, நாகை நாகராஜ், கந்திலி கரிபாலன், சேலம் சுஜாதா உள்ளிட்ட கட்சியின் முன்னணி பேச்சாளா்கள் கலந்து கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.