``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
சேலம் ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சேலம் மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில், காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், சேலம் ரயில் நிலையம் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு கேட்பாரற்று ஒரு பொட்டலம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற மதுவிலக்கு போலீஸாா், அங்கு கிடந்த பொட்டலத்தை பிரித்து பாா்த்தனா். அதில், 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், வெளிமாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்த நபா், போலீஸாரை கண்டதும், அதனை அப்படியே போட்டுவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 21ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை மீட்ட போலீஸாா், அதைக் கொண்டு வந்த மா்ம நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.