சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் தீ விபத்து
சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமாயின.
அவிநாசியை அடுத்த சேவூா் கைகாட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (53), எலாஸ்டிக் தயாரிப்பு நிறுவன உரிமையாளா்.
இவரது வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கையறையில் வியாழக்கிழமை காலை தீப் பிடித்து எரிந்தது. இதையறிந்த கோவிந்தசாமி மற்றும் அருகிலிருந்தவா்கள் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ வேகமாக பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.
இருப்பினும் முதல் தளத்தின் படுக்கையறையில் இருந்த பீரோ, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம், 2 தங்கச் சங்கிலி மற்ரும் ஏ.சி. உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.