செய்திகள் :

சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி

post image

நமது நிருபர்

சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, "அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மறுமேம்பாடுக்காக தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் உள்பட 1,324 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. எனது தொகுதியில் உள்ள சைதாப்பேட்டை ரயில் நிலையத்தையும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தையும் இத்திட்டத்தில் மேம்படுத்த கோரிக்கை அளித்திருந்தேன். அதன் நிலவரத்தை அறிய விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசுகையில், "ரயில்வே துறையை உருமாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 1,300 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அம்ரித் பாரத் நிலையங்களில் ஒன்றாகும். அது நல்ல முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

அங்கு இருமுறை நேரில் சென்றுள்ளேன்.இந்தத் திட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் உற்சாகம், வடிவமைப்பு உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது. இது சென்னை நகரின் முக்கிய ஈர்ப்பு நிலையங்களில் ஒன்றாக இருக்கும். இதர நிலையங்களைப் பொறுத்தவரை, எம்.பி. என்னிடம் நேரில் சந்தித்து விரிவாக விவாதிக்கலாம்' என்றார்.

அமைச்சரின் பதில் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், "சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை அம்ரித் நிலையத்தில் சேர்க்குமாறு ஏற்கெனவே அமைச்சரை கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தேன். இப்போது மீண்டும் பழைய பதிலையே அமைச்சர் குறிப்பிட்டு நேரில் சந்தித்து வலியுறுத்துமாறு மக்களவையில் தெரிவிக்கிறார்' என்றார்.

என்எல்சி விவகாரம்: இதற்கிடையே, என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஊழியர்களின் துயர நிலைமை குறித்து அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதா என்று தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மக்களவையில் புதன்கிழமை மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், என்எல்சி -இல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பயன்கள் மற்றும் நல நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூரை தமிழில் சரியாக உச்சரித்த அமைச்சர்!

தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பும்போது அமைச்சருக்குப் புரிய வைக்கும் நோக்குடன் எழும்பூர் ரயில் நிலையத்தை ஆங்கிலத்தில் எக்மோர் என அழைத்தார். இதைத் தொடர்ந்து அஸ்வினி வைஷ்ணவ் பதிலளிக்க எழுந்த போது, "நான் சென்னை எக்மோர் என்பதை சென்னை எழும்பூர் என சரியாக உச்சரிக்க விரும்புகிறேன். ஆகவே, சென்னை எழும்பூர், அம்ரித் பாரத் ரயில் நிலையங்களில் ஒன்றாகும்' என்றார். அமைச்சர் சரியாக பெயரைக் குறிப்பிட்டவுடன் தமிழில் எழும்பூர் பெயரை உச்சரித்தமைக்கு நன்றி எனக் கூறினார் தமிழச்சி தங்கபாண்டியன்.

"கூடங்குளம், கல்பாக்கம் மின் பகிர்வு விவகாரத்தில் புரிந்துணர்வுடன் ஒருமித்த கருத்து நிலவுகிறது'

நமது சிறப்பு நிருபர்கூடங்குளம், கல்பாக்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாநிலத்துக்கே வழங்கக் கோரும் விவகாரத்தில், கூட்டாட்சி புரிந்துணர்வின்படியே மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு... மேலும் பார்க்க

விரைவு ரயில் வேகம் குறைப்பு: தமிழக எம்.பி.க்கள் கேள்வி

நமது சிறப்பு நிருபர்நாடு முழுவதும் பல்வேறு மார்க்கங்களில் அதிவிரைவு ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவது குறித்தும் விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது குறித்தும் மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.ப... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி ரயில் விபத்துக்கும் "கவச்' தொழில்நுட்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டி.ஆர். பாலுக்கு ரயில்வே அமைச்சர் பதில்

நமது சிறப்பு நிருபர்கும்மிடிப்பூண்டி ரயில் விபத்துக்கும் "கவச்' தொழில்நுட்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வ... மேலும் பார்க்க

ஹிந்து கோயில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம்

நமது நிருபர்தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விருது ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம் கூடாது: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது நிருபர்மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு உரிமம் வழங்கும் முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் புதன்கிழமை வலியுறுத்தினர்.மதுரை மாவட்டம், அரிட்டாபட்... மேலும் பார்க்க