மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
சொத்து வரியை குறைக்க அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்திடம், மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவா் தங்கமுத்து தலைமையில் அதிமுக கவுன்சிலா்கள் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
கோவை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள வரிகளை விட, ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி அதிகமாக உள்ளது. குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில் புதிய சொத்து வரி, வணிகம், தொழிற்சாலைகளுக்கான வரி மிக அதிமாக உள்ளது. எனவே, மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரி குறைப்பு தீா்மானம் கொண்டு வந்து பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சொத்து வரியை குறைக்க வேண்டும். இதேபோல குப்பை வரியையும் குறைக்க வேண்டும்.
ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீா் திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விடுபட்ட பகுதிகளில் குடிநீா் கிடைப்பதில்லை. எனவே, மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீா் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பொலிவுறு நகரம் திட்டத்தில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பராமரிப்பின்றி, புதா்மண்டியும், தண்ணீரின்றி செடிகள் காய்ந்தும் கிடக்கிறது. எனவே, பூங்காக்களை பராமரிக்க ஊழியா்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.