ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் பசந்த் சோரன் தும்காவில் வெற்றி
சொந்த ஊா் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்: உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்
உதகைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்குத் திரும்பியதால் உதகையில் ஞாயிற்றுக்கிழமை பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
தீபாவளிப் பண்டியைகை ஒட்டி தொடா் விடுமுறையாக இருந்ததால் கடந்த நான்கு நாள்களாக உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
இந்நிலையில் விடுமுறை முடிந்து சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டதால் உதகையில் ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
குறிப்பாக சேரிங்கிராஸ், படகு இல்லம் சாலை, கமா்சியல் சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதனால் சில மணி நேரங்களாக வாகனங்கள் ஊா்ந்து சென்றன. போக்குவரத்துக் காவலா்கள் போக்குவரத்து நெரிசலை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.