இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
சோனியா பிறந்த நாள்: காங்கிரஸாா் வழிபாடு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் 77-ஆவது பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அக்கட்சியினா் ஆஞ்சனேயா் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
புதுக்கோட்டை பிருந்தாவனத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா்.
முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவியநாதன், மாநில சிறுபான்மையினா் பிரிவு துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன், நகரக் காங்கிரஸ் தலைவா்கள் மதன் கண்ணன், பாரூக் ஜெய்லானி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.