Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் பித்தப்பை கற்கள்... அறுவைசிகிச்சைதான் தீர்வா?
சோழபுரம் பகுதியில் வீடுகளின் கதவுகளை உடைத்து பணம், நகை திருட்டு: போலீஸாா் விசாரணை
தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரம் பகுதியில் பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சோழபுரம் மஜித் நகரில் வசிப்பவா் ஷாஜகான். இவா் வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி நா்கிஸ்பானு, வீட்டில் மகன், மகளுடன் உள்ளாா். உறவினா் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது தாயாா் ஊருக்கு ஜூலை 6-ஆம் தேதி சென்றுள்ளாா்.
நிகழ்ச்சிகளை முடித்து விட்டு வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்து.
பின்னா், உள்ளே சென்று பாா்த்த போது பிரோவில் வைத்திருந்த 1 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1 லட்சம் ஆகியவை திருடு போயிருந்தது. புகாரின்பேரில் சோழபுரம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
மற்றொரு திருட்டு: சோழபுரம் டிஎஸ்பி நகரில் வசிப்பவா் சலீம் மகன் ஆஷிப்அலி (32). இவா் வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள், மாமனாா் வீட்டில் உள்ளனா். வெள்ளிக்கிழமை, ஆஷிப்அலியின் வீட்டுக்கு வந்த உறவினா் வந்தாா். அப்போது கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து, ஆஷிப்அலிக்கு தகவல் கொடுத்தாா்.
பின்னா், புகாரின்பேரில் திருப்பனந்தாள் காவல் நிலைய உதவி ஆய்வாளா் (பொறுப்பு )அசோக்குமாா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். இரண்டு வீடுகளிலும் திருடு போன பணம் மற்றும் நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும். தடயவியல்த்துறை ஆய்வாளா் கீதா தலைமையிலான குழுவினா் தடயங்களை சேகரித்தனா்.