செய்திகள் :

ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்: கார்கே குற்றச்சாட்டு!

post image

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கார்கே கூறுகையில்,

1952 முதல் 67வது அரசியல் சாசன பிரிவின் கீழ் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை. மாநிலங்களவை தலைவரின் செயல்பாடுகள் அந்தப் பதவியின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது.

அனுவம் வாய்ந்த தலைவரை பேசவிடாமல் தடுக்கிறார். ஆளுங்கட்சிக்குப் பேச வாய்ப்பளிக்கிறார். அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பள்ளி தலைமை ஆசிரியர் போல் செயல்படுகிறார். அவையில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்.

இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மாநிலங்களவை தலைவர் செயல்படுகிறார்.

மாநிலங்களவை தலைவரால் தான் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் இன்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

காஷ்மீா் பிரிவினை கோரிக்கையை ஆதரிக்கும் அமெரிக்க கோடீஸ்வரா் ஜாா்ஜ் சோரஸுடன் காங்கிரஸ் தலைமைக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து மாநிலங்களவையில் திங்கள்கிழமை அக்கட்சி எம்.பி.க்கள் விவாதத்தை எழுப்பினா். அதேநேரத்தில், அதானி லஞ்ச புகாா் விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்தப் பிரச்னையை ஆளுங்கட்சி எழுப்புவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் விமா்சித்தனா்.

இவ்விவகாரம் தொடா்பான நோட்டீஸ்களை நிராகரித்தபோதும், எப்படி ஆளுங்கட்சி உறுப்பினா்கள் இந்தப் பிரச்னையை எழுப்ப அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் அனுமதிக்கிறாா் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே, ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களவை தலைவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

மனைவியின் புகைப்படம் நிர்வாணமாகச் சித்திரிப்பு! கடன் செயலியால் கணவன் தற்கொலை!

ஆந்திரத்தில் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்திரித்த கடன் செயலி முகவர்களால் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.ஆந்திரப் பிரதேசத்தில் மீனவரான சுரேதா நரேந்திரா (21) என்பவரும் அகிலா தேவியும் (24) ஒன்றரை மாதத... மேலும் பார்க்க

பேரிடர் மேலாண்மையில் புது தொழில்நுட்பம், ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறை பணியகத்தின்கீழ் செயல்படும் ‘கூட்டு போர்க்கால ஆய்வுகளுக்கான மை... மேலும் பார்க்க

உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்கள் பயன்!

பெண்கள் உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் 6ஜி திட்டம் விரைவில்! தகவல்தொடர்பு அமைச்சகம் தகவல்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 6ஜி திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மத்திய தகவல்தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்லில் 6ஜி திட்டம் ... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணிக்கு தலைமை? - எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மமதா!

இந்தியா கூட்டணியின் தலைவராகத் தகுதி உடையவர் என கூறிய தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது மத்திய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்ற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் வீணாகும் ஒவ்வொரு நிமிடமும் மக்களின் பணம்!!

மக்களவையில் இரண்டு பில்லியனர்கள் குறித்த பிரச்னைகள் மட்டுமே விவாதிக்கப்படுவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். பில்லியனர்கள் கௌதம் அதானி, ஜார்ஜ் சொரோஸ் இருவர் குறித்த பிரச்னைகள் மட்டுமே மக்களவையில் விவ... மேலும் பார்க்க