செய்திகள் :

ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது: முதல்வர் ஸ்டாலின்

post image

மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பெரியார் எனும் மாமனிதர் கொண்டிருந்த இலட்சிய வைராக்கியத்தின் தொடக்கம்தான் அவர் பங்கேற்ற வைக்கம் போராட்டம். அந்தப் போராட்டத்தில் கிடைத்த வெற்றி என்பது இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் இயக்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய உந்துசக்தி. அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பயணம்.

அந்தப் பயணம் அரசியல் களத்திலும் தொடர்ந்ததன் விளைவாகத்தான் இந்திய அளவிலான இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம், அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உள்ளிட்டவையாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவர் நெறிப்படி, அனைத்துச் சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வாழும் சமத்துவபுரங்களைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்குத் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் சூட்டினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு சமத்துவக் குடியிருப்பு அமைக்கப்பட்டதில்லை என்பதால்தான் நம் தமிழ்நாட்டைப் பெரியார் மண் என்று போற்றுகிறோம்.

மக்களைப் பிளவுடுபத்தி, மாநிலங்களைச்சிறுமைப்படுத்தி ஆளத் துடிப்பவர்களுக்குப் பெரியார் என்றாலும், சமத்துவம் என்றாலும், சமூகநீதி என்றாலும் இவையனைத்தையும் ஒன்றாக்கிய திராவிட மாடல் என்றாலும் எரிச்சல் ஏற்படுகிறது, வன்மம் வெளிப்படுகிறது. வைக்கத்தில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்ட அதே நாளில், ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் ஜனநாயக விரோதத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்துக் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்க நினைக்கிறது.

நடுக்கடலில் மூழ்கிய படகு! மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை!

நடைமுறைச் சாத்தியமில்லாத - மக்களாட்சி முறைக்கு விரோதமான - கூட்டாட்சித் தத்துவத்தைக் குற்றுயிராக்கும் ஒரே நாடு - ஒரே தேர்தல் முறைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 14-2-2024 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைக்கம் விழாவில் பேசிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும், மாநிலங்களின் சுயமரியாதைக்காக நாம் எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். சுயமரியாதை இயக்கம் கண்டு அதன் வழியாகத் திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்ட தந்தை பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. நூறாண்டுகள் கடந்தாலும் நமக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் போராடுவோம்! அவர்களைப் போலவே வெற்றி காண்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனமழை பாதிப்பு; தயாா் நிலையில் முகாம்கள்: மூன்று மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் உத்தரவு

கனமழையால் பாதிக்கப்படும் மக்களைக் காக்கத் தேவையான முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று திருநெல்வேலி உள்ளிட்ட 3 மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திருநெ... மேலும் பார்க்க

புயல் நிவாரணம்: திமுக எம்எல்ஏ-க்களின் ஒரு மாத ஊதியம் முதல்வரிடம் அளிப்பு

ஃபென்ஜால் புயல் பாதிப்புகளை எதிா்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை திமுக எம்எல்ஏ-க்கள் வழங்கினா். ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீா் செய்ய முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ... மேலும் பார்க்க

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அதிகாரப்பூர... மேலும் பார்க்க

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.14) விடுமுறை?

கனமழை காரணமாக தமிழகத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தின... மேலும் பார்க்க

தென்காசியில் நாளை(டிச.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் நாளை(டிச.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்... மேலும் பார்க்க

பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினி நன்றி!

தனக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர்... மேலும் பார்க்க