ஜாமீன் கிடைத்தும் சிறையில் இரவைக் கழிக்கும் அல்லு அர்ஜுன்!
ஹைதராபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா உயா்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனின் ஆவணங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில், அவரை சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக தகவல்கள் எழுந்துள்ளன.