செய்திகள் :

ஜார்க்கண்ட்டை கைப்பற்றியது இந்தியா கூட்டணி! 56 இடங்களில் வெற்றி

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.

மாநிலத்தில் ஆளும் ‘இண்டி’ கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா(ஜேஎம்எம்) 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து, பிறகு காட்சி மாறி, இந்தியா கூட்டணி வெற்றியைப் பதிவு செய்தது.

ஜார்க்கண்ட் பேரவையில் 41 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி என்ற நிலையில், இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறை ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சி ஜார்க்கண்ட்டில் மீண்டும் ஆட்சியமைக்கிறது.

பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2 தொகுதிகளில் அக்கூட்டணி முன்னிலையில் உள்ளன. இதர கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்று உள்ளது.

ஜார்க்கண்டில் ‘இண்டி’ கூட்டணியிடமிருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் வெளியான நிலையில் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

இந்தியா கூட்டணி

ஜேஎம்எம் - 34

காங்கிரஸ் - 16

ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 4

தேசிய ஜனநாயக கூட்டணி

பாஜக- 20

அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 1

மகாராஷ்டிரத்தில் இமாலய வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணி!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக... மேலும் பார்க்க

கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு இல்லை: பினராயி விஜயன்!

கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு மக்களுக்கு இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் செலக்கரா, பாலக்காடு சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்த... மேலும் பார்க்க

பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!

பிரபல டிவி நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் வெர்சோவா தொகுதியில் படுதோல்வியை சந்தித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்கு... மேலும் பார்க்க

வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொட... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அதுபற்றி விரிவாக ஆ... மேலும் பார்க்க

14 மாநில இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்!

இந்தியா முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்குவங்கத்தில் 6, அசாமில் 5, பிகார், பஞ்சாபில் தலா 4... மேலும் பார்க்க