திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
ஜிஎஸ்டி கட்டியதாக ரூ. 65 லட்சம் மோசடி: 4 போ் மீது வழக்குப் பதிவு
திருச்சியில் ஜிஎஸ்டி கட்டியதாக போலி ஆவணம் மூலம் ரூ. 65.50 லட்சம் மோசடி செய்தது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியைச் சோ்ந்தவா் சுமதி (43) இவா் பாலக்கரை காஜாபேட்டை பகுதியில் மொத்த மருந்து விற்பனைக் கடை நடத்துகிறாா். இந்நிலையில் இந்தக் கடைக்கு ஜிஎஸ்டி கட்ட தனது கடையில் கணக்காளராக உள்ள திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த ரவி என்பவரின் வங்கிக் கணக்குக்கு கடந்த 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ரூ. 65 லட்சத்து 56 ஆயிரத்து 43 -ஐ சுமதி தனது வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பியுள்ளாா்.
ஆனால் ரவி திருச்சி இப்ராஹிம் பாா்க் பகுதி தனியாா் நிறுவனத்தை சோ்ந்த புவனா, பரத்குமாா், பிங்கி தேவி ஆகியோருடன் சோ்ந்து போலி ஆவணம் தயாரித்து ஜிஎஸ்டி கட்டியதாகக் கூறி ஏமாற்றினாா். இதையறிந்த சுமதி திருச்சி நீதிமன்றத்தில் அளித்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.