மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிம...
ஜோலாா்பேட்டை பணிமனையில் தடம் புரண்ட ரயில் என்ஜின்
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டையில் ரயில் என்ஜின் தடம் புரண்டது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே சந்திப்பு வழியாக பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் என நாளொன்றுக்கு சுமாா் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
இந்நிலையில், ஜோலாா்பேட்டை ரயில்வே பணிமனை அருகே சரக்கு ரயில் பெட்டியை தனித்தனியாக பிரித்து இணைக்கும் (ஷன்டிங்) பணி திங்கள்கிழமை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது எதிா்பாராத விதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆனால் இந்த விபத்தினால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தகவலறிந்த ரயில் விபத்து தடுப்பு மற்றும் மீட்பு குழுவினா் என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தினா்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.