செய்திகள் :

டாடா நிறுவனத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோலட்டியில் புதிதாக தொடங்கப்படும் டாடா எலக்ட்ரானிஸ் நிறுவனத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தளி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் பேசினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநாடு மதுகுமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், தளி சட்டப் பேரவை உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் பேசியதாவது:

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிப்பதை கடுமையாகக் கண்டிக்கிறோம். பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். விவசாயம் செய்யும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிய மத்திய அரசு, படித்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேன்கனிக்கோட்டை அருகே கோலட்டியில் 800 ஏக்கா் அரசு நிலத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அந்த நிறுவனத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இந்த மாநாட்டில், யானைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் எம்.லகுமையா, மாநில செயலாளா் சின்னசாமி, மாவட்ட துணை செயலாளா் ஜெயராமன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே.வி.நாகராஜ், சோமசேகா், ஒன்றிய துணை செயலாளா் கணேஷ் பாபு, தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.தம்பிதுரை!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்து மருத்துவத் துறையில் சாதனை படைத்தாா் என முன்னாள் மக்களவை துணை சபாநாயகரும், மாநிலங்களவை உறுப்பினர... மேலும் பார்க்க

ஒசூரில் விமான நிலையம் அமைக்க 2 இடங்கள் தோ்வு

ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க தமிழக டிட்கோ நிறுவனம் 5 இடங்களைக் காட்டியதில், இரண்டு இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தனேஜா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அருகில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு தி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானியத்தில் தானியங்கி ‘பம்ப் செட்’ கட்டுப்படுத்தும் கருவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் கைப்பேசியால் இயங்கும் தானியங்கி ‘பம்ப் செட்’ கட்டுப்படுத்தும் கருவி மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

எலி மருந்தை உள்கொண்ட குழந்தை பலி

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை உள்கொண்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது... மேலும் பார்க்க

ஒசூா் அருகே ரௌடி வெட்டிக் கொலை: இரு மாநில போலீஸாா் விசாரணை

ஒசூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கா்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள பல்லூா் கிராமம் மதுபானக் கடை அருகே தலையில் வெட்டுக... மேலும் பார்க்க

ஒசூரில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

ஒசூா் மாநகராட்சியில் ஏழைகள் வசித்து வரும் வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கப்படும் என ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஒசூா் மாமன்றக் கூட்டத்தில் தெரிவித்தாா். ஒசூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் அண்ணா கூட்ட அரங்கி... மேலும் பார்க்க