விழுப்புரம், கடலூரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின்
டாலரை விட்டு வெளியேறினால்... பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை தவிர்த்து வேறு நாணயத்தில் வர்த்தகம் மேற்கொள்ள வாய்ப்பில்லை என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
‘பிரிக்ஸ்’ நாடுகள் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் கடந்த அக். 22 தொடங்கி நடைபெற்றது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த நாடுகளுக்கு இடையே நிதி ஒத்துழைப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானங்களில் பிரிக்ஸ் நாடுகளும், அவற்றின் வா்த்தக கூட்டாளிகளும் உள்ளூா் செலாவணியில் பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்வதை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | உள்ளூா் செலாவணியில் பரிவா்த்தனை: பிரிக்ஸ் கூட்டுப் பிரகடனம்
இது தொடர்பாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ”டாலரில் வர்த்தகம் செய்வதிலிருந்து பிரிக்ஸ் நாடுகள் வெளியேற முயற்சிக்கும் எண்ணத்தை நாம் பார்த்துக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது.
புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவதோ அல்லது அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு நாணயத்தைக் கொண்டு வருவதோ நடக்காது என இந்த நாடுகள் உத்தரவாதம் தரவேண்டும். இல்லையெனில், இவர்கள் அமெரிக்காவிடம் இருந்து 100 % வரிக் கட்டணத்தை எதிர்கொள்வார்கள்.
மேலும், அமெரிக்காவின் அற்புதமான பொருளாதாரத்துடன் செய்யப்படும் வர்த்தகத்திலிருந்து அவர்கள் விடைபெற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க | அமெரிக்கா: இந்திய மாணவா் சுட்டுக்கொலை
அவர்கள் வேறொரு நாட்டினைத் தேடிக் கொள்ளலாம். பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை தவிர்த்து வேறு நாணயத்தில் வர்த்தகம் மேற்கொள்ள வாய்ப்பில்லை. அப்படி எந்த நாடாவது முயற்சித்தால் அவர்கள் அமெரிக்காவிடம் இருந்து விடைபெறலாம்” என்று பதிவிட்டுள்ளார்.