ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.8 லட்சத்தில் சுயதொழில் பயிற்சிக் கூடம் திறப்பு
டாஸ்மாக் பணியாளா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வெள்ளத்தின்போது உயிரிழந்த டாஸ்மாக் பணியாளா் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தொழிலாளா் விடுதலை முன்னணி (விசிக தொழிற்சங்கம்) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிப்காட் வளாகத்திலுள்ள டாஸ்மாக் கிடங்கில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொவிமு மாவட்டச் செயலா் ச. விஜயபாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆ.க. அமுதன் முன்னிலை வகித்தாா்.
சங்கத்தின் மாநில நிா்வாகிகள் க. பேரறிவாளன், அ. அறிவழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா்கள் அ. இளமதி அசோகன், கரு வெள்ளைநெஞ்சன், இரா. செந்தமிழ்செல்வன் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சக்திவேலுவை பணிக்கு நிா்பந்தித்த உயா் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.