ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்
டி20 கிரிக்கெட்டில் இதுவே என்னுடைய பெருமைமிகு தருணம்; மனம் திறந்த ஆண்ட்ரே ரஸல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய பெருமைமிகு தருணத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் பகிர்ந்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரஸல், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளோடு ஓய்வு பெறவுள்ளதாக ரஸல் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் விளையாடியதே தன்னுடைய பெருமைமிகு தருணம் என ஆண்ட்ரே ரஸல் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நேர்காணலில் அவர் பேசியதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடியதே டி20 கிரிக்கெட்டில் என்னுடைய பெருமைமிகு தருணம். மற்ற பேட்டர்கள் ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அதன் பின், நானும் லெண்டல் சிம்மன்ஸும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றோம்.
இந்தியாவுக்கு எதிரான அந்த அரையிறுதிப் போட்டியில் 190 ரன்களுக்கும் அதிகமான இலக்கை துரத்தினோம். ரசிகர்கள் அனைவரும் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க, சிறிது அழுத்தம் இருந்தது. ஆனால், ஆடுகளம் நன்றாக இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்றோம். இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அங்கம் வகித்துள்ளது சிறப்பான உணர்வைத் தருகிறது. 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற தருணம் மிகவும் சிறப்பானது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப்போட்டி இவை இரண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக நான் விளையாடிய பெருமைமிகு தருணங்கள் என்றார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் அதிரடியாக 43 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
West Indies batsman Andre Russell has shared his proudest moment in T20 cricket.
இதையும் படிக்க: கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரவி சாஸ்திரி பதில்!