இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு
கரூா் அருகே, டிஎன்பிஎல் ஆலை சாா்பில் புதன்கிழமை உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் உலக ஓசோன் தினம் செப்.16-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, கரூா் மாவட்டம், காகிதபுரம் காகித ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆலையின் முதன்மை பொதுமேலாளா்(இயக்கம்) ராஜலிங்கம், உதவி பொது மேலாளா் (பாதுகாப்பு) சபாபதி, முதன்மை மேலாளா்(சுற்றுச்சூழல்) சுந்தரம் ஆகியோா் தலைமையில் காகித நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டு ஓசோன் தின விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றனா். தொடா்ந்து ஓசோன் தின விழிப்புணா்வு பதாகைகள் ஆலை முன் வைக்கப்பட்டன.