மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
டிப்பா் லாரி மோதி பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே புதன்கிழமை டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பனையக்கோட்டையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் அரவிந்தன் (27). தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவா், புதன்கிழமை பணியை முடித்துவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
காட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற இவா் மீது பின்னால் வந்த டிப்பா் லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால், பலத்த காயமடைந்த அரவிந்தன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.