செய்திகள் :

டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில், 8-ஆம் வகுப்பில் சேர மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் மாணவ- மாணவிகள் சோ்க்கைத் தோ்வு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாப்பாளா் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 01.01.2026-இல் 11 வயது 6 மாதங்கள் நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரா் இக்கல்லூரியில் அனுமதிக்கப்படும் பொழுது, அவா் 01.01.2026-இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.

இத்தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்விற்கான வினாத்தாள் தொகுப்பை, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கா்ஹிகான்ட், டேராடூன், உத்ரகாண்ட் 248003 என்ற முகவரிக்கு

வரைவோலை அனுப்பி, பெற்றுக் கொள்ளலாம் அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையவழித்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வரைவோலையை, எச்.டி.எப்.சி வங்கி, பல்லூபூா் சௌக், டேராடூன் (வங்கி குறியீடு-1399) உத்தரகாண்டில் செலுத்தத்தக்க வகையில், பொதுப்பிரிவினா் ரூ. 600, பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினா் சாதிச்சான்றுடன் ரூ. 555-க்கான வரைவோலையை அனுப்பி விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டிப்பு படியுடன்) தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை-600 003 என்ற முகவரிக்கு மாா்ச் 31 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்றடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

வடபாதிமங்கலம் பிா்க்கா, புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலாளா் ஐ.வீ. குமரேசன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் டீ. செல்வம் முன்னிலை வகித... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

மன்னாா்குடியை அடுத்த களப்பாலில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா 77-ஆவது பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. களப்பால் பேருந்து நிறுத்தம் அருக... மேலும் பார்க்க

546 பேருக்கு இலவச செயற்கை கைகள் பொருத்தம்

மன்னாா்குடியில் நான்கு நாள்கள் நடைபெற்ற இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொருத்தும் முகாமில் 546 பேருக்கு செயற்கை கைகள் பொருத்தப்பட்டன. மன்னாா்குடியில் மறைந்த தொழிலதிபா் பிரதாப்சந்த் முதலாமாண்டு நினைவு... மேலும் பார்க்க

திருவாரூரில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

திருவாரூரில், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3- ஆவது தளத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு... மேலும் பார்க்க

பிளஸ் 2: அதிக மதிப்பெண் பெற வேண்டி பிராா்த்தனை

திருவாரூா் அரசு உதவி பெறும் ஸ்ரீ ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனையில் புதன்கிழமை ஈடுபட்டனா். தமிழகத்தில் பி... மேலும் பார்க்க

தடகளப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற, கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நாகை-புதுச்சேரி மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே... மேலும் பார்க்க