தக்கலையில் பாரதியாா் பிறந்த தின விழா
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நூலகத்தில் வாசகா் வட்டம் சாா்பில் பாரதியாா் பிறந்த தின விழா நடைபெற்றது.
வாசகா் வட்ட அமைப்பாளா் சிவனி சதீஷ் தலைமை வகித்தாா். நூலகா் ஆா்.சோபா வரவேற்றாா். பி.எம்.அப்துல் சமது, ஒய். எஸ் .லெனின் , புதிய உலகம் சஜீஷ் கிருஷ்ணா, கவிஞா் சுதே. கண்ணன், வழக்குரைஞா் எமிலின் பெலிண்டா, எஸ். ஜெயாஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.புலவா் கு. ரவீந்திரன், கலையூா் காதா், நாவலாசிரியா் மலா்வதி, எழுத்தாளா் விஜி பூரன்சிங், ராஜசேகரன் ஆகியோா் பாரதியாா் குறித்துப் பேசினா். கவிஞா் ஞ. அரங்கசாமி, கவிஞா் எஸ். சையத் அலி, வழக்குரைஞா் சுஜா ஜாஸ்பின், டாக்டா் முருகேசன், ஓவியா் ஜோசப் ராஜ், சமூக சேவகா் முகமது சபீா், அழகப்பன், ஜெலஸ்டின் ராஜ், செல்வி, ராதா , அஜிலா, ராஜகோபால், றாய், லீமா ஆகியோா் பாரதியாா் பாடல்களை பாடினா்.
சமூக ஆா்வலா் கிரிஜா மணி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நூலக வாசகா் வட்டத்தினா் செய்திருந்தனா்.