தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் தங்கம் விலை இன்று(நவ. 23) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த அக்.31-ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.59,640 வரை உயர்ந்து விற்பனையானது. தொடா்ந்து, அமெரிக்க அதிபர் தோ்தல் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தது.
இதன்படி, நவ.1 முதல் நவ.16 வரை தங்கம் சவரனுக்கு ரூ.4,160 குறைந்து, சவரன் ரூ.55,480-க்கு விற்பனையானது.
6-வது நாளாக விலை உயர்வு:
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நவ.18-ஆம் தேதி சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960-க்கும், நவ.19-இல் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கும், நவ.20 -இல் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,920-க்கும், நவ.21-இல் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160-க்கும், விற்பனையானது.
இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமையும் (நவ.22) கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 7,225-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று(நவ. 23) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 75 உயர்ந்து 7,300-க்கும், சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ. 58,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை தொடர்ந்து 4-ஆவது நாளாக எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.101-க்கும், கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 6 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 உயா்ந்துள்ளது.