தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
சென்னை: சென்னையில் தங்கம் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ.58,280-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு மேலும் ரூ.720 குறைந்துள்ளது.
கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.7,140-க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க |ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 குறைந்து ரூ.1,01,000-க்கும் விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 குறைந்து ரூ.1,00,000-க்கும் விற்பனையானகிறது.
ஜன.20-ஆம் தேதி வரை தங்கம் விலை ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் என தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.