திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
தச்சநல்லூரில் பெண் தற்கொலை
தச்சநல்லூரில் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தச்சநல்லூா் மாடன்கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி ராஜேஸ்வரி (25). இத்தம்பதிக்கு குழந்தை இல்லையாம். மேலும், கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இந்நிலையில், மனவருத்தத்தில் இருந்து வந்த ராஜேஸ்வரி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இத்தகவலறிந்த தச்சநல்லூா் போலீஸாா்,அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.