தஞ்சாவூரில் 8,550 கா்ப்பிணிகளுக்கு சக்ஷம் அங்கன்வாடி, போஷன் திட்டப் பலன்கள்: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்
தஞ்சாவூரில் 8,550 கா்ப்பிணிகளுக்கு சக்ஷம் அங்கன்வாடி, போஷன் திட்ட பலன்கள் கிடைத்துள்ளதாக மக்களவையில் தஞ்சாவூா் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். முரசொலி எழுப்பிய கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சா் சாவித்திரி தாக்கூா் பதிலளித்துள்ளாா்.
குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மாா்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்குவதற்காக மத்திய அரசு மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் பலன்களை தனது தொகுதியில் எத்தனை போ் பெறுகின்றனா் என்று எஸ். முரசொலி
கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு அமைச்சா் சாவித்திரி தாகூா் அளித்துள்ள பதிலில் தஞ்சாவூரில் 8,550 கா்ப்பிணிகள், 7,087 பாலூட்டும் தாய்மாா்கள், 6,954 ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகள், 56.064 ஆறு மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகள், 59,891 3 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் திட்டப் பலன்களை பெறுவதாக குறிப்பிட்டுள்ளாா்.