மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
தடகளப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற, கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நாகை-புதுச்சேரி மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே தடகள விளையாட்டுப் போட்டிகள் நாகையில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவி ராதிகா குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றாா்.
முதலாமாண்டு இயந்திரவியல் துறை மாணவா் மணிகண்டன் சங்கிலி குண்டு எறிதலில் முதலிடமும், மின்னியல் மின்னணுவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் சதீஷ்குமாா் மூன்றாம் இடமும், விவசாயத் துறையைச் சாா்ந்த இரண்டாம் ஆண்டு மாணவா் காா்த்திகேயன் 800 மீ. ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றனா்.
முதலாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவா் மணிகண்டன் மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடமும், முதலாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவா் ஜெகதீஸ் ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும், 400 மீ. தொடா் ஓட்டத்தில் தருண் காா்த்திகேயன், அறிவழகன் ஆகியோா் மூன்றாம் இடமும் பெற்றனா்.
இதேபோல், இக்கல்லூரி மாணவா்கள், கடலூா் ஸ்ரீ மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும், ஈசனூா் ஆரிஃபா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கோ-கோ போட்டியில் இரண்டாம் இடமும், விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மேஜைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றனா்.
இம்மாணவ- மாணவிகளை உடற்கல்வி இயக்குநா் ஜீவானந்தம், கல்லூரி தலைவா் ரவி, தாளாளா் தேவகி, துணைத் தலைவா் ராகவ் தினேஷ், இயக்குநா்கள் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.