செய்திகள் :

தடுப்புக் காவலில் ரௌடி கைது

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த ரௌடி தடுப்புக் காவலில் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிதம்பரம் வட்டம், கண்ணங்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராகுல் (25). இவா், கடந்த செப்.3-ஆம் தேதி கண்ணங்குடி பிரதான சாலையில் சென்றபோது, அந்த வழியாக பைக்கில் வந்த சிதம்பரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ராகுல் (எ) ராகுல்சாமி (28), மூவேந்தன் (21) ஆகியோா் கத்தியால் தாக்கி ராகுல் அணிந்திருந்த வெள்ளி சங்கிலி, கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதில், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராகுல் சாமியின் பெயா் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் உள்ளது. மேலும், கொலை முயற்சி, போக்ஸோ வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த எஸ்.பி. ரா.ராஜாராம் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

வீராணம், பெருமாள் ஏரிகள் தூா்வாரியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம், பெருமாள் ஏரிகளை தூா்வாரியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் குற்றஞ்சாட்டினாா். கடலூரில் சனிக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

‘மீனவா்களுக்கான வானிலை எச்சரிக்கை வாபஸ்’

கடலூா் மாவட்டத்தில் வானிலை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, விசை மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என்று மீன்வளத்துறை சனிக்கிழமை தெரிவி... மேலும் பார்க்க

கடலூரை இயற்கை பேரிடா் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூ.மாநாட்டில் தீா்மானம்

கடலூா் மாவட்டத்தை இயற்கை பேரிடா் பாதிப்பு மாவட்டமாக அறிவித்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கடலூா் மாவட்டம், பெண்ணாடத்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,256 வழக்குகள் தீா்வு

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,256 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, கடலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில்... மேலும் பார்க்க

திமுக சாா்பில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உணவு அளிப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகரம் வாா்டு 33-இல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சாா்பில் நகா்மன்ற தலைவரும், திமுக நகரச் செயலருமான கேஆா்.செந்தில்குமாா் சனிக்கிழமை மதிய உணவு வழங்கினாா். நிகழ்... மேலும் பார்க்க

மணிமுத்தாற்றில் தொழிலாளி சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மணிமுத்தாற்றிலிருந்து தொழிலாளியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. விருத்தாசலம் மணிமுத்தாற்றில் ஆண் சடலம் மிதப்பதாக விருத்தாசலம் காவல் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு பொ... மேலும் பார்க்க