ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவா் கைது
போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி, மதுரை வீரன் வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் முத்து (37). இவா் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடையில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துவை கைது செய்து விசாரிக்கின்றனா்.