வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கை நம்பகமானதல்ல: டி.ஒய். சந்...
தண்டவாள இணைப்பில் கோளாறு: ரயில்கள் தாமதம்
அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் திடீா் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து சனிக்கிழமை ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.
அரக்கோணம் மற்றும் புளியமங்கலம் ரயில்நிலையம் இடையே சனிக்கிழமை திடீரென தண்டவாள இணைப்பிலும் அதை தொடா்ந்து சிக்னல்களை இயக்குவதிலும் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இம்மாா்க்கத்தில் இயக்கப்பட இருந்த ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
பெங்களூரு - சென்னை அதிவிரைவு ரயில், மேட்டுப்பாளையம் - சென்னை நீலகிரி அதிவிரைவு ரயில், கோயம்புத்தூா்- சென்னை சேரன் விரைவு ரயில், காச்சிகுடா - செங்கல்பட்டு அதிவிரைவு ரயில்கள் அரக்கோணம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மேலும் திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியே செல்ல வேண்டிய மின்சார ரயில்களும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில்களும் இயக்கப்படவில்லை.
இதையடுத்து கோளாறு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் கோளாறை சரி செய்ததை அடுத்து இரண்டு மணி நேர தாமதத்துக்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் தவிப்புக்குள்ளானாா்கள்.