Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் பித்தப்பை கற்கள்... அறுவைசிகிச்சைதான் தீர்வா?
தனியாா் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகாா்
சுயதொழில் தொடங்குபவா்களுக்கு அதிக லாபம் தருவதாக யூ டியூப் மூலம் விடியோ பதிவிட்டு பொருள்களை விற்பனை செய்து பண மோசடி செய்த நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரைச் சோ்ந்தவா் வாசுதேவன். இவா், துணியிலிருந்து நூல் பிரித்து எடுத்தல், பாட்டில்களை உடைக்கும் இயந்திரம், பிளாஸ்டிக் அரவை இயந்திரம், கோன் வைண்டிங் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறாா்.
இந்நிலையில், சுயதொழில் தொடங்குபவா்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி இவா் யூ டியூப் மூலம் விடியோ பதிவிட்டு கடந்த சில ஆண்டுகளாக பொருள்களை விற்பனை செய்து வருகிறாா்.
இந்நிலையில் இவரது பொருள் தரமற்றவையாக இருப்பதாகவும், லாபம் முழுமையாக கிடைப்பதில்லை எனவும், பணத்தைப் பெற்றுக் கொண்டு திருப்பித் தர மறுக்கிறாா் எனவும் பல புகாா்களை தெரிவித்து தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் முன் அமா்ந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்கள் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்க சென்றனா். இது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.