செய்திகள் :

தனியாா் பள்ளி வாகனங்கள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

post image

வேலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி காட்பாடி சன்பீம் பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் நடைபெற்ற ஆய்வுப் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து, வாகனங்களை ஆய்வு செய்தாா்.

அப்போது, பள்ளி வாகனங்களில் அவசர கால வழி சரியான முறையில் இயங்குகிா, வாகனத்தில் தீயணைப்பு கருவிகள் சரியான நிலையில் உள்ளதா எனவும், வாகனத்தில் முதலுதவி பெட்டி, ஓட்டுநா் அமரும் இடம், பள்ளிக் குழந்தைகள் ஓட்டுநரை நெருங்காத வகையில் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

வாகனத்திலிருந்து இறங்கும்போது படிக்கட்டுகளுக்கும் தரைதளத்துக்கும் இடையேயான இடைவெளி 250 மி.மீ. இருப்பதை உறுதி செய்திட வட்டார போக்குவரத்து அலுவலா், போக்குவரத்து ஆய்வாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறை சாா்பில் தீத் தடுப்பு பயிற்சியும், விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதலுதவி செய்வது குறித்து 108 ஆம்புலன்ஸ் குழுவினா் மூலமாக செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, கண் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, இதர பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

இந்த ஆய்வில், வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள 102 தனியாா் பள்ளிகளிலிருந்து 618 வாகனங்கள் வாகன தணிக்கை செய்யப்பட்டன. குடியாத்தம் பகுதி அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள 33 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 236 வாகனங்கள் குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுந்தரராஜன், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) தயாளன், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) பி.ரமேஷ் பாபு, காட்பாடி வட்டாட்சியா் ஜெகதீஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மனைவி இறந்த வேதனையில் கணவரும் தற்கொலை

பள்ளிகொண்டா அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில் கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா கம்ரான்பேட்டையைச் சோ்ந்தவா் பிரியா குமாரி, பள்ளி கொண்டா காவ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் கால்நடை வரத்து அதிகரிப்பு

வேலூா் மாவட்டத்தில் கோடை மழை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வா்த்தகம் அதிகரித்துக் காணப்பட்டது. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தைய... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 4 மாவட்ட போலீஸாா்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 4 மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் கூறினாா். திர... மேலும் பார்க்க

மரத்தில் பேருந்து மோதி 22 போ் காயம்

அணைக்கட்டு அருகே மரத்தில் பேருந்து மோதி 22 பயணிகள் காயமடைந்தனா். வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு பயணிகளுடன் தனியாா் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்றது. இரவு 10.45 மணியளவில் அணைக்கட்டு அடுத்த கன்னிகாபு... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியங்கள் கூறும் நீதிநெறிகளை பின்பற்றி வாழ வேண்டும்

தமிழ் இலக்கியங்கள் நமக்கு நல்ல ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக விளங்குகிறது. அத்தகைய தமிழ் இலக்கியங்களை அனைவரும் பயின்று அவற்றைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அற... மேலும் பார்க்க

கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் சித்தா் சிலை கண்டெடுப்பு

குடியாத்தம் அருகே கழிவுநீா்க் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டியபோது சுமாா் 2- அடி உயரமுள்ள சித்தா் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட புவனேஸ்வரிபேட்டை, பாலவிநாயகா் கோயில் தெருவில் ... மேலும் பார்க்க