தமிழக-கா்நாடக எல்லையில் மோப்ப நாய் உதவியுடன் போதைப்பொருள் சோதனை
கூடலூரை அடுத்துள்ள தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனைச் சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களில் மோப்ப நாய் உதவியுடன் போதைப்பொருள்கள் கண்டறியும் சோதனையை போலீஸாா் நடத்தினா்.
கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் போதைப் பொருள்களைக் கொண்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில் கூடுதல் எஸ்.பி.சௌந்தராஜன், கூடலூா் டிஎஸ்பி வசந்தகுமாா் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.